Editorial / 2024 ஜூலை 11 , பி.ப. 12:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் சிறுத்தை சிவா. இவர் கடைசியாக ரஜினி நடிப்பில் அண்ணாத்த திரைப்படத்தை இயக்கியிருந்தார். அதை தொடர்ந்து சூர்யா நடிப்பில் கங்குவா திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இவர் பீரியாடிக் திரைப்படமாக இந்த படத்தை இயக்கியுள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைக்கிறார். திரைப்படம் வரும் ஒக்டோபர் 10 ஆம் திகதி வெளியாகவுள்ளது. இப்படத்தை ஞானவேல்ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.
ஞானவேல்ராஜா சமீபத்தில் பங்கேற்ற நேர்காணலில் கங்குபா படத்தின் இரண்டாம் பாகத்தை பற்றி கூறியுள்ளார். அதில் அவர் கங்குவா இரண்டு பாகங்களாக இயக்க திட்டமிட்டுள்ளதாகவும். கங்குவா இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு இறுதியில் அல்லது 2026 ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஆரம்பமாகும் எனவும் , 2027 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறினார்.
இத்திரைப்படம் 38 மொழிகளில் 3டி மற்றும் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் ஒரு பிரம்மாண்ட பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது.
15 minute ago
33 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
33 minute ago
2 hours ago
2 hours ago