2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

கண்தானம் செய்த ரெஜினா

George   / 2016 ஓகஸ்ட் 14 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிப்பில் கவனம் செலுத்தினாலும், மற்றவர்களுக்கு தன்னால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என்பதில் நடிகை ரெஜினா ஆர்வமாக இருக்கிறார்.

அண்மையில் நெல்லூரில் கண் வைத்தியசாலை ஒன்றை திறந்து வைத்த ரெஜினா, தனது கண்களை தானம் செய்து,அதற்கான ஒப்புதல் பத்திரத்திலும் கையெழுத்திட்டார்.

உடல் உறுப்பு தானம் மூலம் இறந்த பிறகும் மற்றவர்களுக்கு நாம் உதவ முடியும்.திரை உலகின் பிரபல நடிகர்கள் பலரும் தங்கள் உடல் உறுப்புகள் மற்றும் கண்களை தானம் செய்திருக்கிறார்கள். அந்த பட்டியலில் தற்போது லேட்டஸ்ட்டாக ரெஜினாவும் இடம் பிடித்திருக்கிறார்.

ரெஜினா தற்போது நெஞ்சம் மறப்பதில்லை, ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், மாநகரம் ஆகிய திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X