2025 மே 16, வெள்ளிக்கிழமை

கபாலி டீசரால் கதி கலங்கிப் போன யுடியூப்!

George   / 2016 மார்ச் 08 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

சொல்ல ஆரம்பித்தால் கொஞ்சம் ஓவராகத்தான் இருக்கும், ஆனால், சொல்லப் போவது ரஜினிகாந்த் பற்றி. அதனால், அதை ரஜினிகாந்த் வகை நகைச்சுவையில் சேர்த்துக் கொண்டால் சரியாகத்தான் இருக்கும். 

கபாலி டீசரால் கதி கலங்கிப் போன யு டியுப் என அடுத்த மாதம் ரஜினி இரசிகர்கள் சொன்னாலும் சொல்வார்கள். தமிழ்த் திரையுலகில் தற்போது  தெறி திரைப்பட டீசர்தான் யுடியூபில் கலக்கிக் கொண்டிருக்கிறது. 

விரைவில் 1 கோடி ஹிட்ஸ், 3 இலட்சம் லைக்ஸ் என தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது, இந்திய சினிமாவிலேயே தனி சாதனையை படைத்து வருகிறது.

அப்படிப்பட்ட ஒரு டீசரின் சாதனையை கலகலக்க வைக்க கபாலி டீசர் அடுத்த மாதம் வெளியாகப் போவதாக நம்பத் தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் கிடைத்துள்ளது. 

தெறி திரைப்பட வெளியீட்டிற்கு முன்னதாக கபாலி டீசரை வெளியிட முடிவு செய்துள்ளார்களாம். அதோடு தெறி வெளியாகும் போது தெறி திரைப்படத்துடன் கபாலி திரைப்பட டீசரையும் இணைக்க முடிவு செய்துள்ளார்களாம். 

அதனால், ரஜினி இரசிகர்களையும், விஜய் திரைப்படத்தைப் பார்க்க வைத்தது போலவும் ஆயிற்று, இரண்டுக்கும் சேர்த்து டபுள் போனஸாக வசூலையும் அள்ளுவதாகவும் ஆயிற்று என்று யோசித்து வருகிறார்களாம். அதற்கு ரஜினி தரப்பிலிருந்தும், விஜய் தரப்பிலிருந்தும் பச்சைக் கொடி காட்டிவிட்டால் இரண்டுமே நடந்து விடும் என்கிறார்கள்.

எப்படியும் கபாலி டீசர் வெளியாகும் போது பல புதிய சாதனைகளைப் படைக்கப் போவது உறுதி என டீசர் பற்றிய செய்தி வரும் போதே ரஜினி இரசிகர்கள் முடிவு செய்துள்ளார்கள். 

தெறிக்கும் கபாலிக்கும் இடையில் சிங்கத்துக்கும் புலிக்கும் இடையில் தன்னை சிங்கமாகச் சொல்லிக் கொள்ளும் சூர்யா 24 டீசரை வெளியிட்டு பூனையாகச் சிக்கிக் கொண்டாரே என விஜய் இரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகிறார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .