George / 2016 ஓகஸ்ட் 21 , மு.ப. 11:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

அண்மையில், மாடிப்படியில் இருந்து தவறி விழுந்த உலக நாயகன் கமல் ஹாசன், ஒருசில வாரங்கள் சிகிச்சை எடுத்து கொண்ட பின்னர் வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார்.
தற்போது சிறுசிறு உடற்பயிற்சி செய்து கொண்டு ஓய்வு எடுத்து வரும் அவருடைய உடல்நிலை குறித்த முக்கிய தகவல் வெளிவந்துள்ளது.
இதுவரை பிறருடைய துணையுடன் எழுந்து நடமாடி வந்த கமல், தற்போது யாருடைய உதவியும் இல்லாமல் நடக்க ஆரம்பித்துவிட்டதாகவும், அவர் சிறிய அளவில் வோக்கிங் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
பொதுவாக ஐம்பது வயதுக்கு மேல் எலும்பு முறிவு ஏற்பட்டவர்கள் எழுந்து நடமாடுவது கடினம். ஆனால் மன உறுதியும் தன்னம்பிக்கையும் உடைய கமல், யாருடைய துணையும் இன்றி எழுந்து நடமாட ஆரம்பித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அவர் இயக்கி நடித்து வரும் சபாஷ் நாயுடு திரைப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் அவர் இன்னும் ஒருசில வாரங்களில் கலந்து கொள்வார் என்றும் பழைய சுறுசுறுப்பான கமல் ஹாசனை விரைவில் காணலாம் என்றும் கூறப்படுகிறது.
4 minute ago
12 minute ago
14 minute ago
19 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
12 minute ago
14 minute ago
19 minute ago