2025 மே 14, புதன்கிழமை

கமல் ஹாசனுக்கு செவாலியர் விருது

George   / 2016 ஓகஸ்ட் 21 , பி.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகர் கமல் ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா துறையில் நடிகர் கமல் ஹாசனின் சிறந்த பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் அவருக்கு இந்த உயரிய விருதை பிரான்ஸ் நாட்டின் கலாசாரத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

களத்தூர் கண்ணாம்மா திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகர் கமல் ஹாசன், கலைத்துறையில் 57 ஆண்டுகளை கடந்து மிகப்பெரும் ஜாம்பவானாக திகழ்ந்து வருகிறார்.

4 தேசிய விருதுகள், 19 பிலிம்பேர் விருதுகள் என ஏராளமான விருதுகளை பெற்றுள்ள கமல் ஹாசனின் கலைத்திறனை பாராட்டி மத்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ, பத்ம பூஷன் ஆகிய விருதுகளையும் வழங்கி கௌரவித்துள்ளது.

நடிகர் சிவாஜி கணேசனுக்கு அடுத்ததாக செவாலியர் விருது பெறும் தமிழ் நடிகர் கமல் ஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .