2025 மே 14, புதன்கிழமை

கமல் ஹாசனுக்கு பாராட்டு விழா: சரத்குமார், ராதாரவிக்கு அழைப்பில்லை

George   / 2016 நவம்பர் 07 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாஜிகணேசனைத் தொடர்ந்து கமல் ஹாசனுக்கு செவாலியே விருது வழங்கப் பட்டிருப்பதை கொண்டாடும் வகையில், நவம்பர் 27ஆம் திகதி தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தின்போது அவருக்கு பாராட்டு விழா நடத்துகிறார்கள்.

இந்த விழாவுக்கு நடிகர் சங்க உறுப்பினர்கள் மட்டுமின்றி முன்னணி கலைஞர்கள் பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட் டுள்ளது.

ஆனால், முன்னாள் நடிகர் சங்கத்தலைவர் சரத்குமார் மற்றும் ராதாரவிக்கு இந்த பாராட்டு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு இல்லையாம். நடிகர் சங்க விவகாரத்தில் அவர்கள் மீது நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருப்பதால் இந்த நேரத்தில் அவர்களை அழைப்பது சரியல்ல என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக விஷால் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X