2025 மே 15, வியாழக்கிழமை

கலாபவன் மணியின் இரத்தத்தில் 45 மில்லிகிராம் இரசாயனம்

George   / 2016 ஜூன் 15 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல மலையாள நடிகர் கலாபவன்மணி கடந்த மார்ச் மாதம் 6ஆம் திகதி தனது பண்ணை வீட்டில் நடந்த மது விருந்தில் மயங்கி விழுந்தது தனியார் வைத்தியாசலையில்; அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பிரேத பரிசோதனை முடிவில் கலாபவன்மணி உடலில் நச்சுத்தன்மை வாய்ந்த பொருள் கலந்ததால் மரணம் நேர்ந்ததாக கூறப்பட்டது. கலாபவன்மணி அருந்திய மது மூலம் இந்த நச்சு பொருள் அவரது இரத்தத்தில் கலந்திருக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

கலாபவன்மணிக்கு மது பழக்கம் காரணமாக கல்லீரல் பாதிப்பு இருந்தது. இதனால் அவர் பியர் மட்டும் குடித்து வந்ததாக அவரது உதவியாளர்கள் தெரிவித்திருந்தனர்.

எனவே பீரில் உயிரை பறிக்கும் அளவுக்கு இரசாயன பொருள் இல்லை என்பதால் யாரோ பியரில் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து கொடுத்திருக்கலாம் என்று புகார் எழுந்தது. இந்த கோணத்திலும் விசாரணை நடந்தது.

இந்த நிலையில் கலாபவன்மணியின் கல்லீரல், சிறுநீரகம், இரத்தம் உள்பட உடல் உறுப்புகள் ஐதராபாத்தில் உள்ள மத்திய ஆய்வுக்கூடத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. தற்போது அந்த பரிசோதனை முடிவுகள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளன.

கலாபவன்மணியின் உடலில் மெத்தனால் என்ற இரசாயன பொருள் 45 மில்லிகிராம் அளவுக்கு கலந்திருப்பது தெரியவந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இது அவரது மரணத்துக்கு காரணமாக அமைந்ததாகவும் மது அருந்தும்போது இந்த அளவுக்கு மெத்தனால் உடலில் கலக்க வாய்ப்பு இல்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, கலாபவன் மணிக்கு யாரோ பியரில் மெத்தனாலை கலந்து கொடுத்திருக்கலாம் என்ற சந்தேகம் மீண்டும் ஏற்பட்டுள்ளதால் அந்த கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டு உள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .