2025 மே 16, வெள்ளிக்கிழமை

கலாபவன் மணியின் மரணத்துக்கு காரணம் கள்ளச்சாராயமா?

George   / 2016 மார்ச் 07 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

உடல்நலக்குறைவால் நேற்று திடீர் காலமான பிரபல நடிகர் கலாபவன் மணியின் கலாபவன் மணியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவருடைய சகோதரர் ராமகிருஷ்ணன், பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

நுரையீரல் பிரச்சினை, சிறுநீரகப் பிரச்னையால் சிகிச்சை பெற்று வந்த கலாபவன் மணி, கொச்சியிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டார். 

அன்றைய தினம் அவருடைய வீட்டில் சுயநினைவு இல்லாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. உள்ளூரில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், பிறகு கொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அங்குச் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு நிம்மி என்கிற மனைவியும் ஸ்ரீPலட்சுமி என்கிற மகளும் உள்ளார்கள்.

இந்நிலையில், கலாபவன் மணியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவருடைய சகோதரர் ராமகிருஷ்ணன், பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து, சந்தேகமரணம் என வழக்குப் பதிந்த பொலிஸார் விசாரித்து வருகின்றனர். மேலும் மரணத்துக்கான காரணத்தைக் கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவருடைய சாலக்குடி இல்லத்தில் காவல்துறை தீவிரமாக விசாரித்து வருகிறது. 

கள்ளச்சாராயத்தில் உள்ள மெத்தனால் என்ற நச்சுத்தன்மையுள்ள அமிலம் அவருடைய உடலில் இருந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இதனால்,  உடற்கூறு ஆய்வுக்காக கலாபவன் மணியின் உடல் அரசு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டது. அதனையடுத்து, திருச்சூர் அரசு வைத்தியசாலையில் உடற்கூறு ஆய்வு இன்று காலை நடத்தி முடிக்கப்பட்டது. இதனால், கலாபவன் மணியின் மரணம் குறித்த சந்தேகங்களுக்கான விடை விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .