Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 மார்ச் 07 , மு.ப. 10:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
மறைந்த மலையாள நடிகர் கலாபவன் மணியின் திடீர் மறைவு மலையாளத் திரையுலகத்தை மட்டுமல்ல தென்னிந்தியத் திரையுலகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
கலாபவன் மணி குடும்பத்தாருக்கு பிரதமர் நரேந்திர மோடி சார்பாக அவரது அலுவலகம் மூலம் இரங்கல் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
நடிகர் கமல்ஹாசன், 'நண்பன் கலாபவன் மணியின் மறைவு வருத்தமடைய வைத்துள்ளது. மற்றுமொரு மலையாளி சகோதரர் கல்லீரர் நோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்துள்ளார். அவரது பணி அவரால் ஈர்க்கப்பட்டவர்களிடம் தொடரும்,' எனக் கூறியுள்ளார்.
நடிகர் சூர்யா, 'மிகச் சிறந்த நடிகருக்கு என்னுடைய மரியாதை. ஒரு நல்ல நண்பர். அவருடன் செலவிட்ட நேரம் நெஞ்சுக்குள் இருக்கிறது, அவரது ஆன்மா சாந்தியடையட்டும்' எனக் கூறியுள்ளார்.
கடந்த வாரம் தான் மலையாள இயக்குநரான ராஜேஷ் பிள்ளை திடீர் மரணம் அடைந்தார். ஜனவரி மாதம் மலையாள நடிகையான கல்பனா மாரடைப்பால் திடீர் மரணம் அடைந்தார்.
அவர்கள் இருவரின் மரணத்திலிருந்து மீளாத மலையாளத் திரையுலகம் நேற்று இரவு கலாபவன் மணியின் மறைவாலும் அதிர்ச்சியடைந்தது. கலாபவன் மணி பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் தனது தனித்துவமான நடிப்பால் இரசிகர்களையும், இயக்குநர்களையும் கவர்ந்தவர்.
தமிழில் 1998ஆம் ஆண்டு வெளிவந்த மறுமலர்ச்சி திரைப்படம் முதல் கடைசியாக அவர் நடித்து வெளிவந்த பாபநாசம் வரை எண்ணற்ற கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். குணச்சித்திரம், நகைச்சுவை, வில்லன் என தமிழிலேயே அவர் பலவிதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
சில தெலுங்கு, கன்னடத் திரைப்படங்களிலும் நடித்துள்ள கலாபவன் மணி மறைவுக்கு தென்னிந்தியத் திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
2000ஆம் ஆண்டில் வாசந்தியும் லட்சுமியும் பின்னே ஞானும் என்ற திரைப்படத்துக்காக சிறப்பு ஜுரி தேசிய விருது பெற்றவர் கலாபவன் மணி என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படம்தான் விக்ரம் நடிக்க காசி யாக தமிழில் ரீமேக் செய்யப்பட்டது.
26 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
2 hours ago