Editorial / 2020 ஜனவரி 20 , பி.ப. 01:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
கவர்ச்சிப் படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதால் மட்டும், சினிமா வாய்ப்புகள் கிடைத்து விடாது. திறமை இருந்தால் மட்டுமே சினிமா வாய்ப்புகள் தேடி வரும் என நடிகை ஹூமா குரேஷி தெரிவித்திருக்கிறார்.
அவர் கூறுகையில், “நடிகைகள் கவர்ச்சிக்கு மட்டுமல்ல; கதைக்கும் முக்கியம் என்ற கருத்து பரவி வருகிறது. கதாபாத்திரத்துக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கஷ்டப்பட கதாநாயகிகள் தயாராகி இருக்கிறார்கள்.
உழைப்புக்கு, சினிமாவில் நல்ல பலனும் கிடைக்கிறது. நான் சினிமாவில் நடிக்க குடும்பத்தினர் சம்மதிக்கவில்லை. ஆனாலும் உறுதியாக இருந்து நடிகையானேன்.
நான் வட இந்திய பெண். தென்னிந்திய உணவுகள் பற்றி எதுவும் தெரியாது. ரஜினியுடன், காலா படத்தில் நடித்த பின்தான், தென்னிந்திய உணவின் ருசி தெரிய ஆரம்பித்தது.
அதன்பின், தென்னிந்திய உணவுக்கு அடிமையாகி விட்டேன். வட இந்திய உணவுகள், பிடிக்காமல் போய்விட்டது. பட வாய்ப்புக்காக, வலைத்தளத்தில் கவர்ச்சி படங்களை வெளியிடுவதாக சொல்கின்றனர்.
கவர்ச்சி படங்களை பார்த்து மட்டும் பட வாய்ப்புகள் வருவதில்லை. சினிமாவுக்கு கவர்ச்சி மட்டும் போதாது. நடிப்புத் திறமையும் வேண்டும்” என்றார்.
14 minute ago
23 minute ago
24 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
23 minute ago
24 minute ago