Editorial / 2020 ஜூலை 23 , பி.ப. 04:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
தன்னை பற்றி அவதூறு பரப்புவதாக தெரிவித்து கஸ்தூரி, லக்ஷ்மி ராமகிருஷ்ணன் மற்றும் நாஞ்சில் விஜயன் ஆகியோர் மீது நடிகை வனிதா புகார் அளித்துள்ளார்.
கடந்த மாதம் 27ஆம் திகதி பீட்டர் பால் என்பவரை நடிகை வனிதா மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.
இதனையடுத்து, பீட்டர் பாலின் முதல் மனைவியான எலிசபெத் ஹெலன் தனது கணவரை மீட்டு தருமாறு பொலிஸாரிடம் புகார் அளித்தார்.
இதனால் இந்தப் பிரச்சனை பெரும் பூதாகரமானது. பலரும் வனிதாவின் திருமணம் குறித்து விமர்சித்தனர்.
இதனை தொடர்ந்து நடிகை வனிதா, கஸ்தூரி மற்றும் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ஆகியோர் சமூக வலைதளங்களில் மோதிக் கொண்டனர்.
இந்நிலையில் நடிககைகள் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் கஸ்தூரி மற்றும் விஜய் டிவி பிரபலமான நாஞ்சில் விஜயன் ஆகியோர் மீது பொலிஸில் புகார் அளித்துள்ளார் வனிதா.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .