Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2024 ஜூலை 24 , மு.ப. 11:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிம்பு ஜோடியாக ‘வானம்’ படத்தில் நடித்தவர் ஜாஸ்மின் பாஸின். தெலுங்கிலும் சில படங்கள் நடித்து இருக்கிறார். அவர் திரைப் படங்களில் நடித்தது குறைவு தான் என்றாலும் டிவி தொடர்கள், வெப் சீரிஸ், ஆல்பம் பாடல்கள் என பிசியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் அவர் புதுடெல்லியில் நடந்த ஒரு பெஷன் ஷோவில் கலந்துகொண்டார். அப்போது கண்ணில் ‘காண்டாக்ட் லென்ஸ்’ போட்டுக்கொண்ட பிறகு கண்ணில் எரிச்சல் ஏற்பட்டு இருக்கிறது.
அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என்பதால் பொறுத்துக்கொண்டு கூலிங் க்ளாஸ் அணிந்துகொண்டு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.
சிறிது நேரத்தில் கண் எரிச்சல் அதிகமாகி பார்வை மங்கலாகத் தொடங்கிய நிலையில், அவருக்கு கண் பார்வை பறிபோயுள்ளது.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு உழசநெயட Corneal Damage ஏற்பட்டு இருக்கிறது என கூறி, இரண்டு கண்களுக்கும் கட்டு போட்டுள்ளார்கள்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘தற்போது மும்பைக்கு வந்து சிகிச்சையை தொடர்ந்து வருகிறேன். இப்போதும் கண்பார்வை மங்கலாகவே தெரிகிறது. சீக்கிரம் குணமாகும் என நம்புகிறேன். எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள்’ என உருக்கமாக தெரிவித்துள்ளார்.S
8 hours ago
8 hours ago
23 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
23 Aug 2025