2025 ஜூலை 03, வியாழக்கிழமை

சைக்கோ சைத்தான்

George   / 2016 ஓகஸ்ட் 01 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிச்சைக்காரன் திரைப்படத்தை அடுத்து விஜய் அன்டனி, சைத்தான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்க, நாயகியாக மலையாள நடிகை அருந்ததி நாயர் நடித்துள்ளார்.

முதற்பார்வை போஸ்டர் ஏறகெனவே வெளியாகியுள்ள நிலையில், சைத்தான் திரைப்படத்தின் புதிய போஸ்டரை சனிக்கிழமை மலை வெளியிட்டுள்ளனர்.

அதில், விஜய் அன்டனியும், ஒரு நரியும் நேருக்கு நேர் முறைத்துக்கொண்டு நிற்பது போன்ற காட்சி உள்ளது.

முதல் பாதியில், அருந்ததி நாயரை துரத்தி துரத்தி காதலிப்பது போன்று கதை செல்ல, இரண்டாம் பாதியில் அவர் திருமணமாகி தம்பதிகளாகி விடுவார்களாம்.

ஆனால், அதையடுத்து குடும்பத்துக்குள் வெடிக்கும் பிரச்சினைதான் திரைப்படமாம். அந்த வகையில், ஒருகட்டத்தில் சைக்கோவாகி விடுவாராம் விஜய் ஆண்டனி. பின்னர் அவர் செய்யும் பிரச்சினைகள்தான் மிகுதி கதையாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .