2025 மே 16, வெள்ளிக்கிழமை

சாதனை படைக்கும் தெறி வசூல்

George   / 2016 ஏப்ரல் 25 , மு.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

'

தெறி வெளியான அன்று முதல் நாள் முதல் காட்சி பார்த்தவர்கள் இது பெரிய அளவில் வசூலிக்க வாய்ப்பில்லாத திரைப்படம் என்ற கருத்தைப் பரப்பினர். 

புலி திரைப்படத்தை விட கொஞ்சம் மேலாகவும்;, கத்தி திரைப்படத்தை விட கொஞ்சம் கீழாகவும் இருப்பதாகவே கூறினார்கள்.

ஆனால், அனைவரது எதிர்பார்ப்பையும் மீறி தெறி கடந்த பத்து நாட்களில் பலமான வசூலை அள்ளிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. 

முதல் வாரம் மட்டுமே வசூல் இருக்கும், அதன் பின் இறங்கிவிடும் என்றும் அடுத்து ஒரு புதிய கணக்கைச் சொன்னார்கள். அந்தக் கணக்கையும் மீறி நேற்றும், அதற்கு முன்தினமும் தமிழ்நாடு முழுவதும் பல திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடியிருக்கிறது.

செங்கல்பட்டு ஏரியாவில் 60 திரையரங்குகளுக்கு மேல் திரைப்படம் வெளியாகவில்லை. அங்கு ஆக வேண்டிய வசூல், அப்படியே பக்கத்தில் உள்ள சென்னை மாநகர திரையரங்குகளுக்கு இடம் பெயர்ந்தது. 

இதனால், சென்னை மாநகர வசூல் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. சென்னையில் உள்ள பல திரையரங்குகளிலும் திரைப்படம் பத்து நாட்களாக அரங்கு நிறைந்த காட்சிகளாகவே போய்க் கொண்டிருக்கிறதாம்.

இந்த விடுமுறையில் மக்கள் குடும்பத்துடன் வந்து பார்க்கக் கூடிய திரைப்படமாக அப்பா, மகள் சென்டிமென்ட்டுடன் தெறி இருந்ததுதான் அதற்கு முக்கியக் காரணம் என்கிறார்கள். 

வெளிநாடுகளிலும் தெறி, பெரிய வசூலைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் 1 மில்லியன் டொலர் வசூலைக் கடந்த தெறி, அவுஸ்திரேலியாவில் எந்திரன் திரைப்படத்தின் வசூலை மிஞ்சியிருக்கிறது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

'தெறி திரைப்படம் வசூலில் பல புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது, அது இன்னமும் அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம்' என்கிறார் திரைப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு.

 

 


You May Also Like

  Comments - 0

  • jilla mani Monday, 25 April 2016 09:26 AM

    Suppr vijay anna theri mass

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .