George / 2015 டிசெம்பர் 09 , மு.ப. 04:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

சென்னையில் பெய்த கடும் மழை காரணமாக, 13ஆவது சர்வதேச திரைப்பட விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வருடாந்தம் நடைபெறும் சென்னை திரைப்படவிழா, இம்மாதம் 10ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கடந்த வாரம் தமிழகத்தில் பெய்த பேய் மழை காரணமாக குறிப்பாக சென்னை உள்ளிட்ட நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின.
அதனையடுத்து, மக்களின் அன்றாட வாழ்ககையைப் போல திரைப்படத் துறையும் முடங்கியுள்ளது.
பல இடங்களில் வெள்ள நீர் வடிந்தாலும் நிலமை இன்னும் சீராகவில்லை. அத்துடன், மக்கள் இன்னும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவில்லை.
அதனையடுத்து, சென்னை திரைப்படவிழா தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
விழா நடைபெறும் தினம் தீர்மானிக்கப்பட்டு பின்னர் அறிவிக்கப்படும் என விழா ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025