2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

சின்னத்திரை நடிகர் சடலமாக மீட்பு

George   / 2016 மார்ச் 14 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

சின்னத்திரை நடிகர் சாய் பிரசாந்த், விஷம் குடித்து உயிரிழந்த நிலையில் அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அத்துடன், தொடர் மனவுளைச்சலே தனது முடிக்கு காரணம் என அவர் கடிதமும் எழுதி வைத்த கடிதம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமாகி பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிறகு வெள்ளித்திரையிலும் நடிக்க தொடங்கியவர் சாய்பிரசாந்த். இவர், முன்தினம் பார்த்தேனே, வடகறி, நேரம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர், தொடர்ந்து தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார். 

இவரது பெற்றோர்கள் பெங்களூரில் உள்ளனர். சாய்பிரசாந்த், சென்னை வளசரவாக்கத்தில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று மாலை அவர் தனது வீட்டில் விஷம் குடித்துள்ளார்.

இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அவரது நண்பர்கள் மற்றும் பொலிஸார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று சாய்பிரசாந்த் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

சாய்பிரசாந்த் வீட்டில் இருந்து பொலிஸார் ஒரு கடிதத்தை கைப்பற்றி உள்ளனர். அந்த கடிதத்தில், தன்னுடைய வாழ்வில் தொடர்ந்து வரும் தீராத மனவுளைச்சலே தனது இந்த முடிவுக்கு காரணமென எழுதி வைத்துள்ளார். இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்தாகிய சாய் பிரசாந்த், நிரஞ்சனா என்பவரை கடந்த வருடம் காதல் திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X