2025 மே 16, வெள்ளிக்கிழமை

சூப்பர்ஸ்டாருக்கு இன்று பிறந்தநாள்

George   / 2015 டிசெம்பர் 12 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் சினிமாவில் எத்தனையோ நட்சத்திரங்கள் வந்து போயிருக்கலாம், ஆனால் தமிழ் சினிமாவின் முடிசூடாத மன்னனாக விளங்கும் சூப்பர்ஸ்டார் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றார்.

தமிழ், ஹிந்தி, கன்னடம், வங்காளம், ஆங்கிலம் என 160க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பஸ் நடத்துனராக வாழ்க்கையை ஆரம்பித்து, பின்னர் சினிமா துறைக்குள் வந்து கடின உழைப்பால் முன்னணிக்கு வந்து சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வருடாந்தம் பெரும் விழாவாக ரஜினியின் பிறந்தநாளை இரசிகர்கள் கொண்டாடி வந்தாலும் இம்முறை தனது பிறந்தநாளை கொண்டாடப் போவதில்லை என ரஜினி தெரிவித்திருந்தார்.

தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பேய் மழை காரணமாக மக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளதால் தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களை நிறுத்துவதாக ரஜினி தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்று போல என்றும் சாதனை நாயகனாக திகழ சூப்பஸ்டாருக்கு எமது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .