2025 மே 15, வியாழக்கிழமை

சிருஷ்டியின் திடீர் முடிவு

George   / 2016 ஓகஸ்ட் 11 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேகா திரைப்படத்தில் நாயகியாக நடித்தவர் சிருஷ்டி டான்கே. அந்த திரைப்படம் வெளியான நேரத்தில் தமிழக இளைஞர்களின் கனவுக்கன்னி பட்டியலில் இடம்பிடித்தார்.

இருந்தாலும், சிருஷ்டி டான்கே நடித்த திரைப்படங்கள் அவருக்கு கைகொடுக்காததால் வேகமாக வளருவார் என்ற எதிர்பார்க்கப்பட்ட அவர் இன்னமும் பின்தங்கியே இருக்கிறார். அதோடு, சில திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் தற்போது நடித்து வருகிறார்.

இந்த திடீர் முடிவு குறித்து சிருஷ்டி டான்கே கூறுகையில், 'சினிமாவில் கதாநாயகியாக புகழ் பெற வேண்டும் என்பதே எனது இலக்காக இருந்தபோதும், நான் எதிர்பார்த்த சில திரைப்படங்கள் வெற்றிபெறவில்லை. அதனால், இப்போது சிறிய வேடமாக இருந்தாலும் பேசப்படக்கூடியதாக இருந்தால் நடிக்க தயாராகி விட்டேன்.

அந்த வகையில், தர்மதுரையில நான் ஒரு சிறிய வேடத்தில்தான் நடித்திருக்கிறேன். விஜயசேதுபதி, தமன்னாவுடன் மருத்துவ கல்லூரியில் படிக்கும் நான், ஒருதலையாக விஜயசேதுபதியை காதலிக்கும் வேடம். அந்த வகையில், அந்த கதையில் குறைந்த நேரமே வருகிறேன். ஆனால் அந்த திரைப்படம் வெற்றி பெற்றால் நான் நடித்துள்ள சிறிய வேடமும் பேசப்படும்.

மேலும், பொட்டு, காலக்கூத்து போன்ற திரைப்படங்களிலும் நடித்திருக்கிறேன். இந்த திரைப்படங்களில் எனக்கான காட்சிகள் குறைவாக இருந்தாலும், அவை என்னை நிருபிக்ககூடிய வேடங்கள்.

அதனால், இப்போது நான் நடித்துள்ள திரைப்படங்கள் ஒன்றன்பின் ஒன்றாக திரைக்கு வரும்போது, தமிழ் சினிமாவில் இடம் கிடைத்துவிடும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .