2025 மே 16, வெள்ளிக்கிழமை

சிவகாமியின் செல்வன் டிஜிட்டல் பதிப்பு

George   / 2016 மார்ச் 02 , மு.ப. 02:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

1974ஆம் ஆண்டு சி.வி.ராஜேந்திரன் இயக்கத்தில், சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ, லதா, எஸ்.வி. ரங்காராவ், ஏ.எம்.ராஜன், எம்.என்.ராஜம் நடிப்பில் வெளிவந்து பெரும் வெற்றிபெற்ற சிவகாமியின் செல்வன் திரைப்படம் தற்போது புதிய தொழில் நுட்பத்துடன் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு மீண்டும் நம் கண்களுக்கும், காதுகளுக்கும் விருந்து படைக்க விரைவில் வெளிவரவுள்ளது. 

இத்திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா அண்மையில் மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

டிஜிட்டல் மயமாக்கப்பட்ட இந்த முயற்சி, மறைந்த இந்திய விமானப்படை வீரரான பிரவினுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டதுடன் இவ்விழாவை பிரவினின் தாயார் மஞ்சுளா குத்துவிளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார். நீதியரசர் பொன்னுசாமி, சிவகாமியின் செல்வன் டிரைலரை வெளியிட கமலா சினிமாஸ் வள்ளியப்பன் பெற்றுகொண்டார்.

சென்னை, திருச்சி, சேலம் மற்றும் கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வந்திருந்த அதிகளவான சிவாஜி இரசிகர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

கனகசபை தயாரிப்பில் உருவான சிவகாமியின் செல்வன் டிஜிட்டல் திரைப்படத்தை மதுரை சிவா மூவிஸ் மற்றும் ஸ்ரீ சூர்யா மூவிஸ் என்பன தமிழ்நாடு முழுவதும் வெளியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .