Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2015 டிசெம்பர் 07 , பி.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
2004ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற காதல் திரைப்படத்தில் அறிமுகமான நடிகை சந்தியாவுக்கு ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற்றது.
கேரளாவைச் சேர்ந்த சந்தியா, சென்னை வடபழனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவருக்கும், சென்னை அசோக் நகரைச் சேர்ந்த ஐ.டி. என்ஜினீயர் வெங்கட் சந்திரசேகரன் என்பவருக்கும் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர்.
இவர்களது திருமணம் சென்னையில் நடைபெறுவதாக இருந்த போதும், சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளம் சந்தியா தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பையும் சூழ்ந்ததால் திருமணத்தை சென்னைக்கு பதில் கேரள மாநிலம் குருவாயூர் கோவிலில் நடத்தலாம் என சந்தியாவின் பெற்றோரும், மணமகனின் பெற்றோரும் முடிவுவெடுத்தனர்.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மழை ஓய்ந்து நிலைமை சீரடைந்ததும் சந்தியா குடும்பத்தினரும், மணமகன் வெங்கட் சந்திரசேகரன் குடும்பத்தினரும் சென்னையிலிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை குருவாயூர் கோவிலில் சந்தியா- வெங்கட்சந்திரசேகரன் திருமணம் எளிய முறையில் நடந்தது. இதில் இருவரின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். மழை வெள்ளம் ஓய்ந்தபிறகு வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த இருவீட்டாரும் முடிவு செய்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .