Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2015 டிசெம்பர் 30 , மு.ப. 03:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஸ்திஜாதே திரைப்படத்தில் நடிகை சன்னி லியோனுக்கு முத்தக்காட்சி கிடையாது, காதல் உணர்வை தூண்டும் காட்சிகள் எதுவும் கிடையாது என்று அத்திரைப்படத்தின் இயக்குநர் மிலாப் ஜவேரி தெரிவித்துள்ளார்.
பொலிவூட்டின் கவர்ச்சி கன்னியாக வலம் வரும் நடிகை சன்னி லியோனின் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள மஸ்திஜாதே திரைப்படத்தில் துஸார் கபூர், வீர் தாஸ் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
இத்திரைப்படம் பற்றி இயக்குநர் மிலாப் கூறுகையில், சன்னி லியோனை எல்லோருக்கும் செக்ஸி நடிகையாகத்தான் காண்பித்துள்ளார்கள். ஆனால், இந்தப்படத்தில் அவரை நகைச்சுவை நடிகையாக காட்டியுள்ளோம்.
நான் முதன்முதலில் சன்னி லியோனை சந்தித்தபோது அவரது உண்மையான நகைச்சுவை குணம் தெரிந்தது.
அதனையடுத்து அவருக்காக இந்த கதையை உருவாக்கினேன். இத்திரைப்படத்தில் சன்னி லியோனுக்கு முத்தக்காட்சி கிடையாது, காதல் உணர்வை தூண்டும் காட்சிகள் எதுவும் கிடையாது என்றார்.
மஸ்திஜாதே திரைப்படம் 2016, ஜனவரி மாதம் 29ஆம் திகதி வெளியாகவுள்ளது.
38 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
3 hours ago