George / 2015 டிசெம்பர் 17 , மு.ப. 09:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

முன்பெல்லாம் நடிகை சமந்தா படப்பிடிப்பு தளங்களில் ஓய்வாக இருந்தால் அங்கிருப்பவர்களிடம் அரட்டையில் இறங்கி விடுவார். அப்போது பெரும்பாலும் மற்ற மொழிகளில் வெளியான திரைப்படங்கள் பற்றியும், அதில் நடிகர் நடிகைகள் நடித்திருப்பதையும் பற்றியும்தான் அவரது அரட்டை இருக்கும்.
சினிமா சம்பந்தப்பட்ட அரட்டை என்பதால் யூனிட்டில் உள்ள பலரும் அவரது கருத்துக்கு ஆதரவாக அல்லது எதிராக பேச, பெரிய ரகளையே நடக்கும்.
ஆனால், அண்மைகாலமாக சமந்தாவின் பேச்சில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாம். குறிப்பாக, விழிப்புணர்வு மற்றும் சமூக அக்கறையுடன் அவர் பேசுகிறாராம். நாட்டில் வறுமை இருக்கக்கூடாது. கொடிய நோய்கள் வரவே கூடாது என்றெல்லாம் கூறும் சமந்தா, தான் பங்கேற்று வரும் பிரதியுஷா பவுண்டேசன் பற்றி நிறைய பேசுகிறாராம்.
அதன்மூலமாக தான் ஆற்றி வரும் சமூகப்பணிகள் பற்றி கூறுவதோடு, வாழும் காலத்தில் அனைவருமே தங்களால் இயன்ற உதவிகளை மற்றவர்களுக்கு செய்ய வேண்டும். வாழ்வில் அதைவிட சிறந்த பெருமை எதுவும் இல்லை என்றும் சொல்லி, மற்றவர்களுக்கும் உதவி செய்யும் மனப்பான்மையை ஏற்படுத்தி வருகிறாராம் சமந்தா.
ஏன் இந்த திடீர் மாற்றம்!!!
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025