Princiya Dixci / 2016 ஜூன் 28 , மு.ப. 06:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

சினிமாவில் நடித்து வரும் பிரபல நடிகர், நடிகைகள், நடித்துக்கொண்டே, கடை திறப்பு விழா, விளம்பரப் படங்களில் நடிப்பதென பல வழிகளில் பணம் சம்பாதித்து வருகின்றனர். கடை திறப்பு விழாக்களில் அதிக ஆர்வம் காட்டும் சமந்தா, எங்கு சென்றாலும் ரசிகர்கள் மத்தியில் சிக்கிக்கொள்கின்றாராம்.
அந்த வகையில், மதுரையில் நடைபெற்ற வீ-கேர் 32ஆவது கிளை திறப்பு விழாவுக்குச் சென்றிருந்த சமந்தாவை பாதுகாப்பதற்கு, பொலிஸார் பலத்த ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.
இருப்பினும், சமந்தாவை காணத் துடித்த ரசிகர்கள், மேடையை நோக்கி முன்னேறிவிட்டார்களாம். இதனால் ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக, விழா மேடை சரிந்ததோடு, ஒலிப்பெருக்கிகளும் கீழே விழுந்துவிட்டனவாம்.
அத்துடன், சமந்தாவின் சொகுசு காரின் டயரை, யாரோ பஞ்சராக்கிவிட்டார்களாம். இதனையடுத்து, ரசிகர்கள் மீது தடியடி மேற்கொண்ட பொலிஸார், சமந்தாவை பாதுகாப்பாக வேறொரு காரில் அனுப்பி வைத்தார்களாம்.
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago