2025 மே 15, வியாழக்கிழமை

சர்ச்சையில் சிக்கிய இறைவி இயக்குநர்

George   / 2016 ஜூன் 05 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இறைவி திரைப்படத்தில்; தயாரிப்பாளர்களையும், தமிழ் இன உணர்வாளர்களையும்  இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அசிங்கப்படுத்தியுள்ளார் என அவருக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 

தனது படைப்பைப் பற்றிப் பேச வேண்டுமென அவர் வேண்டுமென்றே கூட இப்படிச் செய்திருக்கலாம் என்றும் சிலர் குற்றம் சாட்டுகிறார்கள்.

திரைப்படத்தில் இயக்குநராக நடித்திருக்கும் எஸ்.ஜே.சூர்யாவின் முடங்கிப் போன திரைப்படத்தின் பெயர் மே 17. அதோடு ஒரு காட்சியில் தமிழ் தமிழ் என பேசறவங்களுக்கு சரியான செருப்படி கொடுத்தீங்க என்றதொரு வசனமும் தமிழ் இன உணர்வாளர்களை மிகவும் கோபப்படுத்தியிருக்கிறது.

தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தமிழ் திரைப்படம் எடுத்துக் கொண்டு தமிழர்களையே கேவலப்படுத்துவதா என அவர்கள் குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளார்கள்.

அதோடு எஸ்.ஜே.சூர்யாவின் திரைப்படம் முடங்கிப் போவதற்குக் காரணமாக அந்தத் திரைப்படத்தின் தயாரிப்பாளர் தான் இருக்கிறார் என காட்சிகள் உள்ளன. 

கார்த்திக் சுப்பராஜ் இயக்கி இதற்கு முன் இயக்கி வெளிவந்த ஜிகர்தண்டா திரைப்படம் வெளியீட்டிற்கு முன்னதாக அவருக்கும் அந்தத் திரைப்படத்தின் தயாரிப்பாளரும், தற்போது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் துணைத் தலைவரான கதிரேசனுக்கும் இடையே பிரச்சனை இருந்தது. 

அதை மனதில் வைத்து இந்த இறைவி திரைப்படத்தில் வேண்டுமென்றே காட்சிகளை வைத்துள்ளார் என்று தயாரிப்பாளர்களும் கொதித்துப் போயுள்ளனர்.

இறைவி  விவகாரங்கள் சூடு பிடிக்கும் என்று தெரிகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .