Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 26 , பி.ப. 04:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
மௌனம் பேசியதே, பருத்திவீரன, ராம் போன்ற பிளாக் பஸ்டர் படங்களைக் கொடுத்த இயக்குநர் அமீருக்கு துணை இயக்குநராக பணியாற்றிய துரைவானன் என்பவர் சிகிச்சைக்கு பணமின்றி உயிரிழந்தது திரைத் துறையினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுப்பிரமணியம் படத்தின் இணை இயக்குநர், அமீரின் படங்களில் துணை இயக்குநர், யாசகன் என்னும் திரைப்படத்தின் இயக்குநர் இப்படி தமிழ் சினிமாவில் நீக்கமற இருந்தவர் தான் துரைவாணன்.
சில தினங்களுக்கு முன்னதாக சிகிச்சைக்கு பணமில்லாமல் இருப்பதாக தகவல்கள் இணையத்தில் கசிந்தன.ஐசியு வார்டில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வந்த துரைவாணன் பணநெருக்கடியால் மேற்கொண்டு சிகிச்சையை மேற்கொள்ள முடியாமல் போனது. இந்நிலையில் நேற்று மாலை அவர் காலமானார்.
இயக்குநர் கனவுகளோடு சென்னைக்கு வருபவர்கள் ஆயிரம் ஆயிரம் பேர். குடும்ப நெருக்கடி, பண நெருக்கடி, பட்டினி, இருக்க இடம் இல்லாமல் தெருத் தெருவாக அலைந்து திரிந்து வாய்ப்புகளைப் பெற்று தங்களை நிலை நிறுத்திக் கொள்ள முயற்சிக்கிறார்கள்.
சினிமாவில் தங்களை நிலை நிறுத்திக் கொள்ள முடிகிறதே தவிர பொருளாதார ரீதியில் தங்களை நிலை நிறுத்திக் கொள்ள முடியவில்லை. துரைவாணன் மட்டுமல்ல திறமையின் மீது நம்பிக்கை வைத்து சினிமாக் கனவோடு வந்து உயிர் நீத்த உதவி இயக்குநர்களின் பல பேரின் மரணத்திற்கு முக்கிய காரணம் திறமையை நிரூபிக்க சரியான வாய்ப்பு கிடைக்காததும், பொருளாதார நெருக்கடியும் தான்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
11 minute ago
20 minute ago