Editorial / 2026 ஏப்ரல் 06 , பி.ப. 01:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

சன் தொலைக்காட்சியின் பிரபலத் தொடரான 'கயல்' சீரியலில் நடித்து வந்த நடிகை சுபாஷினி (32), சென்னையில் உள்ள அவரது குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், சீரியல் படப்பிடிப்புகளுக்காகச் சென்னையில் தங்கிப் பணியாற்றி வந்தார்.
இன்று காலை அவரது குடியிருப்பில் அவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், சுபாஷினியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில், குடும்பத் தகராறு காரணமாக அவர் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். எனினும், உயிரிழப்பிற்கான உண்மையான காரணம் குறித்து பொலிஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
'கயல்' சீரியல் மூலம் மக்களிடையே வரவேற்பைப் பெற்ற இவரது திடீர் மறைவு, சக கலைஞர்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
24 minute ago
30 minute ago
51 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
30 minute ago
51 minute ago
59 minute ago