Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஓகஸ்ட் 25 , பி.ப. 02:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகுபலியில் பிரபலமான பிரபாஸ் அடுத்து ராமாயணம் கதையில் நடிக்கிறார். படத்துக்கு ஆதிபுருஷ் என்று பெயர் வைத்துள்ளனர்.
3டி தொழில் நுட்பத்தில் இந்தி, தெலுங்கு மொழிகளில் தயாரித்து தமிழ், மலையாளம், கன்னடம் மொழிகளிலும் வெளியிடுகின்றனர். ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடிக்கிறார்.
இந்த படம் குறித்து இயக்குநர் நாக் அஸ்வின் கூறும்போது, “ஆதிபுருஷ் படம் ராமாயணத்தை மையமாக வைத்து உருவாகிறது. கடவுள் ராமராக பிரபாஸை பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சில நடிகர்கள்தான் இதற்கு முன்னால் ராமராக நடித்துள்ளனர்” என்றார்.
இந்த படத்தின் பட்ஜெட் ரூ.500 கோடி ரூபாய் என்றும் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு மட்டும் ரூ.250 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்காக ஹொலிவுட் நிறுவனங்களுடன் பேசி வருகின்றனர். அடுத்த வருடம் படப்பிடிப்பை தொடங்கி 2022-ல் திரைக்கு கொண்டு வருகிறார்கள்.
வில்லத்தனமான ராவணன் கதாபாத்திரத்தில் நடிக்க சயீப் அலிகான், ராணா ஆகியோர் பரிசீலிக்கப்படுகின்றனர்.
சீதை வேடத்தில் நடிக்க கீர்த்தி சுரேசிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஏற்கனவே நடிகையர் திலகம் படத்தில் மறைந்த நடிகை சாவித்திரி வேடத்தில் நடித்து பாராட்டு பெற்றார்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago