2025 மே 07, புதன்கிழமை

சோனாக்ஷியின் முடக்கம்

Editorial   / 2020 ஜூன் 22 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்டதை அடுத்து, ஹிந்தி சினிமாவில் கடும் சர்ச்சை எழுந்துள்ளது.

சினிமாவில் நிலவும் அரசியல், வாரிசு நடிகர், நடிகைகளால் மற்றவர்களுக்கான வாய்ப்பு பறிபோவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகின்றது.

வாரிசு நடிகர், நடிகைகளின் சமூக வலைத்தள பக்கங்களில் சிலர் சரமாரியாக கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகை சோனாக்‌ஷி சின்ஹாவின் சமூக வலைத்தள பக்கங்களுக்கு சென்றும் சிலர் கேள்வி கேட்டனர். முன்னதாக, சுஷாந்த் சிங் மரணமடைந்தபோது, நடிகை கங்கனா, பொலிவுட்டை கடுமையாகச் சாடியிருந்தார்.

அப்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் நடிகை சோனாக்‌ஷி, ‘ஒருவர் மரணமடைந்திருக்கும் நேரத்தில் சிலர் அவர்கள் பிரச்சினைகளைச் சொல்லி விளம்பரம் தேடுகிறார்கள். தயவுசெய்து அப்படி செய்வதை நிறுத்துங்கள். உங்களது எதிர்மறைக் கருத்தும், வெறுப்பும் இப்போது தேவையற்றது’ என்று கூறியிருந்தார்.

இதை கங்கனாவுக்கு எதிராகத்தான் அவர் கூறியதாக ரசிகர்கள் கருதியதால், காரசாரமான வாக்குவாதங்கள் கிளம்பின. இந்த நிலையில் சோனாக்‌ஷி, தனது ட்விட்டர் கணக்கை முடக்கி உள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X