George / 2015 டிசெம்பர் 30 , மு.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்கவுள்ள கடவுள் இருக்கான் குமாரு என்றத் திரைப்படத்தில் இரண்டு நாயகிகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
த்ரிஷா இல்லனா நயன்தாரா திரைப்படத்துக்குப் பிறகு, டார்லிங் இயக்குநர் சாம் அன்டன் இயக்கத்தில் ஆனந்தியுடன் புதிய திரைப்படமொன்றில் ஜி.வி. நடித்துக் கொண்டிருக்கிறார். முழுக்க முழுக்க கொமடியாக உருவாகவுள்ள இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு, ஜனவரி மாதத்தின் இறுதியில் ஆரம்பமாகிறது.
அதனையடுத்து, எம்.ராஜேஷ் இயக்கத்தில் கடவுள் இருக்கான் குமாரு என்ற திரைப்படத்தில் ஜி.வி. நடிக்கவுள்ளதுடன் த்ரிஷா இல்லனா நயன்தாரா திரைப்படத்தில் சிறப்புத்தோற்றத்தில் நடித்த ப்ரியா ஆனந்தை கதாநாயகியாக சிபாரிசு செய்திருக்கிறார்.
அத்துடன் இன்னொரு கதாநாயகியாக, இது என்ன மாயம், ரஜினி முருகன் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
தனுஷ் உடன் சென்னை டூ டெல்லி திரைப்படத்தில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், அதனைத் தொடரந்து கடவுள் இருக்கான் குமாரு திரைப்படத்தில் முதல்முறையாக ஜி.வி.பிரகா{டன் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025