2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

ஜீவாவுக்காக... காதல் பாட்டு

George   / 2016 ஓகஸ்ட் 11 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிவூட்டின் பிரபலமான பாடகர் அர்மான் மலிக். இவர் தற்போது ஜீவா, காஜல் அகர்வால் நடிக்கும் கவலை வேண்டாம் திரைப்படத்தில் ஜீவாவுக்காக உன் காதல் என்ற பொப் ரக மெல்லிசை காதல் பாடலை பாடியுள்ளார்.

இது குறித்து இசையமைப்பாளர் லியோ ஜேம்ஸ், இப்படிச் சொல்லுகின்றார்,

'அர்மான் மலிக்கின் குரலுக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அந்த வகையில் நானும் அவருடைய மிகப்பெரிய ரசிகன். சமூக வலைத்தளத்தின் உதவியால் நான் அவரிடம் தொடர்பில் இருக்க முடிந்தது.

கவலை வேண்டாம் திரைப்படத்தின் உன் காதல் என்னும் மெல்லிசை பாடல் டியூனைஅவருக்கு அனுப்பிய அடுத்த கணமே அர்மான், பாடலை பாட சம்மதித்து விட்டார். அந்த அளவுக்கு இந்த பாடலானது அவரை கவர்ந்துவிட்டது.

மும்பையின் புகழ் பெற்ற ஒரு ஸ்டுடியோவில் இந்த பாடலை நாங்கள் பதிவு செய்தோம். நிச்சயம் கவலை வேண்டாம் படத்தின் பாடலானது தமிழக ரசிகர்களுக்கு ஒரு புதுமையான அனுபவத்தை தரும் என்ற நம்பிக்கை எனக்கு முழுமையாக இருக்கிறது' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X