2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

தேசிய கீதத்தை அவமதித்தாரா அமிதாப்?

George   / 2016 மார்ச் 23 , மு.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய தேசிய கீதத்ததை தவறாக பாடியதாக பொலிவூட் நடிகர் அமிதாப்பச்சன் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளளது.

இருபதுக்கு 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் இந்தியவில் பரபரப்பாக நடந்து வருகின்ற நிலையில் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற போட்டியில் அமிதாப்பச்சன், சச்சின்டெண்டுல்கர், இம்ரான் கான், உள்ளிட்ட பிரபல கிரிக்கெட் வீரர்களும், பொலிவூட் நட்சத்திரங்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது, அமிதாப்பச்சன் தேசிய கீதத்தை பாடினார். அவர் பாடலை தவறாக பாடியதாக டெல்லியை சேர்ந்த உல்ஹாஸ் என்பவர் டெல்லி அசோக்நகர் பொலிஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

'இந்திய அரசின் உள்துறை அமைச்சக வழிகாட்டுதலின் படி தேசிய கீததத்தை 52 விநாடிகளில் பாடி முடிக்க வேண்டும். ஆனால் அமிதாப்பச்சன், ஒரு நிமிடம் 22 விநாடிகள் பாடினார். தேசிய கீதத்தில் இல்லாத வார்த்தைகளை பயன்டுத்தினார்.

சில வார்த்தைகளை தவறாக உச்சரித்தார். இது தேசிய கீதத்தை அவமதிக்கும் செயலாகும். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்ற அந்த புகார் மனுவில் குறிபிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X