2025 மே 16, வெள்ளிக்கிழமை

துப்பறியும் ஸ்ருதி

George   / 2015 டிசெம்பர் 07 , பி.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகர் சூர்யா நடிக்கும் சிங்கம் 3 திரைப்படத்தில் துப்பறியும் அதிகாரி வேடத்தில் நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளாராம்.
சிங்கம் திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அனுஷ்காவை நடிக்க வைத்த இயக்குநர் ஹரி, சிங்கம்-2 திரைப்படத்தில் அனுஷ்காவுடன் கல்லூரி பெண் வேடத்தில் ஹன்சிகாவையும் நடிக்க வைத்தார். 

அதேப்போல் சிங்கம்-3 திரைப்படத்திலும் அனுஷ்காவுடன் இன்னொரு நாயகியாக ஸ்ருதிஹாசனை நடிக்க வைக்கிறார்.

மூன்றாம் பாகத்தில் சூர்யா-அனுஷ்காவுக்கு திருமணமாகி அவர்கள் கணவன்-மனைவியாக வாழ்வது போன்று கதை உருவாக்கப்பட்டுள்ளதுடன் திரைப்படம் முழுவதும் சூர்யாவுடன் இணைந்து நடிக்கும் வகையில் ஸ்ருதிஹாசன் பாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளதாம்.

முதல்கட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடத்த திட்டமிட்ட ஹரி, இப்போது சென்னையைப்போன்று அங்கேயும் மழை பெய்து வருவதால் தாமதம் செய்து கொண்டிருக்கிறார். மழை நின்ற பிறகுதான் சிங்கம்-3 திரைப்படக்குழு அங்கு செல்கிறதாம். அவர்களுடன் ஸ்ருதியும் செல்லவுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .