2025 மே 16, வெள்ளிக்கிழமை

தமன்னாவின் மாற்றம்

George   / 2015 டிசெம்பர் 30 , மு.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இதுவரை இல்லாத அளவுக்கு நடிகை தமன்னாவை அசல் கிராமத்து பெண்ணாகவே மாற்றிவிட்டாராம் இயக்குநர் சீனுராமசாமி.

நகரத்து பெண் கதாபாத்திரங்களுக்குத்தான் தமன்னா பொருத்தமான நடிகையாக இருப்பார் என்று நினைக்கும் பல இயக்குநர்கள் அவ்வாறான கதையம்சங்களைக் கொண்ட திரைப்படங்களில்  நடிப்பதற்கு தமன்னாவை தேடிவருகின்றனர்.

ஆனால், தமன்னாவுக்கோ மண்வாசனை கதைகளில் நடிக்க வேண்டும் என்பதில் அண்மைகாலத்தில் கூடுதல் ஆர்வம் ஏற்பட்டுள்ளதாம்.

தான் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படங்களும் பேசப்பட வேண்டும் என்று நினைக்கும் அவருக்கு இப்போது விஜயசேதுபதியுடன் நடிக்க கிடைத்துள்ள தர்மதுரை திரைப்படத்தில் வழக்கமான நாயகியாக இல்லாமல் அழுத்தமான வேடம் கிடைத்துள்ளதாம்.

ஏற்கெனவே சீனுராமசாமி இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று திரைப்படம் பாணியில் உருவாகி வரும் இந்த தர்மதுரை திரைப்படத்தில் டூயட்டே இல்லாத ஒரு புதுமாதிரியான கதாநாயகியாக நடிக்கும் தமன்னாவை பக்கா மதுரைக்கார பெண்ணாகவே மாற்றி ஆடிசன் நடத்தினாராம இயக்குநர் சீனுராசாமி.

அப்போது கனகச்சிதமாக அந்த கெட்டப்புக்கு பொருந்திய தமன்னா, கண்ணாடி முன்பு நின்று இது நானா என்று கிள்ளிப்பார்த்துக் கொண்டாராம். அந்த அளவுக்கு இதுவரை பார்க்காத மதுரைவாசியாக அவரை பக்காவாக மாற்றி விட்டாராம் சீனுராமசாமி.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .