Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Menaka Mookandi / 2016 ஏப்ரல் 07 , மு.ப. 09:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
சினிமா மற்றும் சின்னத்திரை நடிகரான பப்லு தற்கொலை செய்து கொண்டதாக வாட்ஸ்ஆப்பில் பரவிய வதந்தியால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவள் வருவாளா, வாரணம் ஆயிரம், பயணம், அழகன் உட்பட பல திரைப்படங்களில் நடித்தவர் பப்லு எனும் பிருத்விராஜ். தற்போது 'வாணி ராணி' என்ற தொலைக்காட்சித் தொடரில் நடித்து வருகிறார்.
நேற்றும் இன்றும் வாட்ஸ்ஆப்பில் அவர் பேசியதாக ஒரு ஆடியோ வெளியானது. அதில், 'என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. நான் பிறந்த பாவம். அழும்போது சுற்றி இருந்தவர்கள் சிரித்தார்கள். நான் சிரித்துக்கொண்டே சாகிறேன். சுற்றி இருப்பவர்கள் அழட்டும். என் சாவு இந்த உலகத்துக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கட்டும். நான் வாழும்போது என்னுடைய அருமை தெரியல. நான் செத்ததுக்கு அப்புறம் தெரியட்டும்' என்று பேசியிருந்தார்.
இது பரபரப்பைக் கிளப்பியது. அவரை அலைபேசியிலும் தொடர்புகொள்ள முடியவில்லை. வாணி ராணியைத் தயாரிக்கும் ராடான் நிறுவனமும் அவரைப் பற்றி தகவல் ஏதும் தங்களுக்குத் தெரியாது என்று கூறிவிட்டனர். பொலிஸ் தரப்பிலும் இந்த ஆடியோ உண்மைதானா? என்று விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் ஆடியோவில் இடம்பெற்றது ஒரு குறும்படத்தில் அவர் பேசிய வசனம் என்று இப்போது தகவல் கிடைத்துள்ளது. பப்லு நலமாக இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
2 hours ago
4 hours ago