Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
George / 2016 ஏப்ரல் 10 , பி.ப. 05:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
இதுவரை ஜூன் மாதம் அஜீத்தின் 57ஆவது திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று செய்திகள் வெளியாகி வந்த நிலையில், தற்போது அஜீத் பிறந்த நாளான மே மாதம் 1ஆம் திகதி நடக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
தொடரந்து, ஜூன் மாதம் 6ஆம் திகதி முதல் படப்பிடிப்பு சென்னையிலுள்ள பின்னி மில்லில் தொடங்குகிறதாம்.
வீரம், வேதாளம் திரைப்படங்களை தொடர்ந்து அஜீத்தின் 57ஆவது திரைப்படத்தை இயக்கும் ஆரம்ப வேலைகளில் தீவிரமடைந்திருக்கிறார் இயக்குநர் சிவா.
கடந்த சில மாதங்களாக கதை விவாதத்தில் ஈடுபட்டிருந்த அவர், தற்போது தமிழ்நாடு மட்டுமின்றி சில வெளிமாநிலங்களுக்கும் சென்று லொகேசன் பார்த்து வருகிறார். அத்துடன், நடிகர் -நடிகையர் தேர்வு செய்யும் பணிகளும் நடந்து கொண்டிருக்கிறது.
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் ஆளுடா டோளுமாவை விட சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து விட வேண்டும் என்று டியூன் போடும் வேலைகளை தொடங்கி விட்டாராம் அனிருத்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .