2025 மே 08, வியாழக்கிழமை

தலைக்கேறிய போதை; தயாரிப்பாளரை தாக்கிய பிரபல நடிகை!

Editorial   / 2019 டிசெம்பர் 30 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல நடிகையான நிக்கி கல்ராணியின் சகோதரி  சஞ்சனா கல்ராணி. கன்னட கன்னட சினிமாவில்  நடித்து வரும் இவர் தமிழில்  அருண் விஜயின் ‘பாக்சர்’ படத்திலும், சிரிச்சா போச்சு நடிகர் ராமர் ஹீரோவாக நடிக்கும் ‘போடா முண்டம்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் அண்மையில் இரவு நேர விருந்தில் கலந்து  கொண்ட சஞ்சனா கல்ராணி அளவுக்கு அதிகமாக மது அருந்தி விட்டு கன்னட தயாரிப்பாளர் வந்தனா ஜெயினிடம் போதையில் தகராறு செய்து வந்துள்ளார். 

ஒருகட்டத்தில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றவே,  சஞ்சனா தனது கையில் வைத்திருந்த பீர் பாட்டிலால் வந்தனாவை தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து  வந்தனா ஜெயின், சஞ்சனா கல்ராணி மீது பொலிஸில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த பொலிஸார் சஞ்சனாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆனால்  இதை மறுத்துள்ள சஞ்சனா வாக்குவாதத்தில் ஈடுபட்டேன் ஆனால்  பீர் பாட்டிலால் தாக்கவில்லை என்று விளக்கம் அளித்துள்ளதாகத் தெரிகிறது. இந்த சம்பவம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X