2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

தள்ளிப்போகும் திருமணம்?

Editorial   / 2020 ஜூன் 12 , மு.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகர் ராண, மிஹீகா பஜாஜ் எனும் பெண்ணை காதலிப்பதாக அண்மையில் அறிவித்தார். அதைத்தொடர்ந்து திருமணத்தை உறுதி செய்யும் நிகழ்வு பெற்றோர் முன்னிலையில் நடைபெற்றது.

வரும் ஓகஸ்ட் மாதம் 8ஆம் திகதி ஐதராபாத்தில் வைத்து அவர்களது திருமணம் நடக்கும் என அறிவிப்பு வெளியானது.

ஆனால் கொரோனா பிரச்சினை அதிகரித்து வருவதால் ஓகஸ்ட் 8ஆம் திகதி திருமணத்தை நடத்துவதில் ராணா குடும்பத்தினருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதனால் திருமணத்தை தள்ளி வைக்க அவர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நவம்பர் அல்லது டிசெம்பர் மாதத்தில் திருமணத்தை நடத்தி முடிக்க ராணா குடும்பத்தினர் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X