George / 2016 மார்ச் 22 , மு.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

தெறி திரைப்படத்தின் இசை வெளியீட்டின் போது, தான் ஆற்றிய உரையில் இடம்பெற்ற தவறுக்கு நடிகர் விஜய் வருத்தம் தெரிவித்துள்ளார்.
சென்னை சத்யம் திரையரங்கில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்த இசை வெளியீட்டு விழாவில் உரையாற்றி விஜய், இரசிகர்களுக்கு ஒரு குட்டிக்கதை சொன்னார். அதில் ரஷ்யாவின் முன்னாள் அதிபர் மாவோ என தவறுதலாக கூறினார்.
இதை சமூக வலைதளங்களில் இரசிகர்கள் சிலர் கிண்டல் செய்தனர். இந்த செய்தி விஜய்யின் விஜய்க்கு தெரியவர, உடனே தவறுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.
'பெரிய மேடைகளில் நாம் சில கருத்துக்களை இரசிகர்களுக்காக சொல்லும் போது இந்த மாதிரியான தவறுகள் நடந்து விடுகிறன. இதற்காக நான் வருந்துகிறேன். மற்றபடி நான் சொன்ன கருத்துக்கள் மக்களை சென்றடையும் என நம்புகிறேன்' என்று விஜய் கூறியுள்ளார்.
6 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago