2025 மே 16, வெள்ளிக்கிழமை

நகைச்சுவை நாயகி

George   / 2016 மார்ச் 02 , மு.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரண்மனை 2 திரைப்படத்தில் பேயாக நடித்த திரிஷா, அதையடுத்து கதையின் நாயகியாக நடிப்பதில் ஆர்வம் காட்டத் தொடங்கினார். சில கதைகளை ஓகே செய்ததில் தற்போது நாயகி திரைப்படம் மட்டுமே படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.

கொடி தவிர இன்னும் இரண்டு திரைப்படங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. மேலும், நாயகி திரைப்படத்தில் இரண்டுவிதமான கெட்டப்புகளில் நடித்துள்ளார் திரிஷா.

திரில்லர் கதையில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தில் இறுதிகட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. மேலும், 1980களில் நடக்கும் கதையில் உருவாகிறது. அதனால், தன்னை அந்த காலகட்டத்து பெண்ணாகவே மாற்றி, அப்போதைய நடிகைகள் திரைப்படங்களில் நடித்து வந்தது போன்று நடித்துள்ளார். முக்கியமாக ஒரு கெட்டப்பில் முழுக்க அந்த காலத்து உடைகளை அணிந்தே நடித்திருக்கிறாராம் திரிஷா.

அதோடு, இதற்கு முன்பு நடித்த திரைப்படங்களில் நகைச்சுவையில் பெரிதாக ஸ்கோர் பண்ணாத திரிஷா, இந்தத் திரைப்படத்தில் சில காட்சிகளில் வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கிறாராம். அந்த காட்சிகளை டப்பிங் முடிந்த பிறகு பார்த்த திரிஷாவும் நீண்ட நேரமாக விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருந்தாராம். அந்த அளவுக்கு நாயகியில் திரிஷாவின் நகைச்சுவை நடிப்பு செட்டாகியுள்ளதாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .