George / 2016 ஓகஸ்ட் 09 , மு.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பழம்பெரும் கவர்ச்சி நடிகை ஜோதிலட்சுமி(வயது 68) சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று இரவு காலமானார்.
1963ஆம் ஆண்டு பெரிய இடத்துப் பெண் என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானவர் ஜோதிலட்சுமி.
1970-களில் கறுப்பு வெள்ளை கால தமிழ் சினிமா தொடங்கி இன்றைய காலம் வரை சினிமா, சின்னத்திரை என அழகாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ஜோதிலட்சுமி. ஜோதிலட்சுமி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ஜோதிலட்சுமியின் கவர்ச்சி நடனத்துக்காகவே திரைப்படங்கள் ஓடி வெற்றி பெற்றுள்ளன. ‛முத்து' படத்தில் ‛கொக்கு சைவ கொக்கு...' மற்றும் விக்ரமின் ‛சேது படத்தில் ‛கான கருங்குயிலே...'' பாடல்களுக்கு ஜோதிலட்சுமி போட்ட ஆட்டத்தை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறக்க முடியாது. இந்த வயதிலும் இப்படி ஆட்டம் போடுகிறாரே என்று இளசுகளையே வியக்க வைத்தவர்.
இன்றைக்கும் அதே அழகோடு சீரியல்களில் நடித்து வந்தார். இரத்த புற்று நோயினால் பாதிக்கப்பட்டிருந்தும் அதைப் பற்றிய அடையாளம் எதுவும் இன்றி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார்.
வள்ளி சீரியல்களில் அவர் அணியும் புடவைகளுக்கு இல்லத்தரசிகள் ரசிகைகளாக மாறியுள்ளனர். ஒவ்வொரு எபிசோடிலும் ஜோதிலட்சுமியை பார்க்கவே வள்ளி சீரியல் பார்த்தவர்கள் உள்ளனர்.
டி.ராஜேந்தர், நாசர், லலிதா குமாரி, கோவை சரளா, அம்பிகா, சங்கர் கணேஷ் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலர் அஞ்சலி செலுத்தினர்.
ஜோதிலட்சுமிக்கு ஜோதிமீனா என்ற மகள் உள்ளார். இவரும் சினிமாவில் நடித்திருக்கிறார். ஜோதிலட்சுமியின் இறுதிச்சடங்கு, சென்னை, கண்ணம்மாபேட்டையில் இன்று மாலை நடைபெறுகிறது.
5 minute ago
13 minute ago
15 minute ago
20 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
13 minute ago
15 minute ago
20 minute ago