2025 மே 16, வெள்ளிக்கிழமை

நடிகர் சிம்பு கைதாவார்?

George   / 2015 டிசெம்பர் 14 , மு.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகர் சிம்பு பாடி, இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து, இணையத்தில் வெளியான, பீப் பாடலுக்கு எதிரான புகாரை தொடர்ந்து சிம்புவுக்கு கோவை பொலிஸார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

இந்நிலையில், அவரை கைதுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தமிழகத்தில் பெய்த மழையினால் மக்கள் சொல்ல முடியாத துயரத்தில் இருக்கும் இந்த சூழ்நிலையில், நடிகர் சிம்பு - அனிருத் கூட்டணியில் உருவான பீப் சாங், இணையத்தில் வெளியாகி, பெண்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கடும் கண்டனத்தை பெற்றுள்ளது.

இந்நிலையில், பீப் பாடல் தொடர்பாக நடிகர் சிம்புவுக்கு கோவை பொலிஸார் சம்மன் அனுப்பியுள்ளனர். இந்த சம்மன், டி.ராஜேந்தரிடம் வழங்கப்பட்டுள்ளது. அதில் எதிர்வரும் 19ஆம் திகதிக்குள் கோவை ரேஸ்கோர்ஸ் பொலிஸில் ஆஜராக வேண்டும் என்று அந்த சம்மனில் கூறப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .