2025 மே 16, வெள்ளிக்கிழமை

நட்சத்திர கிரிக்கெட்டுக்கு சிம்புவும் எதிர்ப்பு?

George   / 2016 ஏப்ரல் 07 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு, நடிகர் சிம்புவும் எதிர்ப்பு தெரிவிப்பதாக தகவல் பரவி வருகிறது. 

17ஆம் திகதி நடக்கவுள்ள நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் அணிகளின் அறிமுக விழா அண்மையில் நடைபெற்ற போது சிம்பு பங்கேற்கவில்லை. 

அஜீத் போலவே, சிம்புவும் நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் ஆர்வம் காட்டவில்லை என, சினிமா வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது.

நடிகர் அஜீத், நடிகர் சங்க கட்டட நிதிக்காக, மக்களிடம் பணம் வசூலிப்பதை விரும்பவில்லை. அதனை போலவே  சிம்புவும் விரும்பவில்லை. நட்சத்திர கிரிக்கெட் போட்டியில், ஒரு அணியின் தலைமையை ஏற்க அழைப்பு விடுத்தும், சிம்பு அதை ஏற்கவில்லை.

ஆனால், இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு நிதி திரட்டுவது, எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்தில் இருந்தே நடந்து வரும் நடைமுறை என்பது சிம்புவுக்கு தெரியாதோ என்னவோ?


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .