J.A. George / 2021 ஜூலை 20 , மு.ப. 08:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகர் சித்தார்த் காலமானதாக யூடியூபில் வீடியோ ஒன்று வெளியானதற்கு சித்தார்த் புகார் அனுப்பியதற்கு அதிர்ச்சி பதில் ஒன்றை யூடியூப் நிர்வாகம் அனுப்பி உள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் யூடியூப் வீடியோ ஒன்றில் இளம் வயதில் காலமான திரை உலக பிரபலங்கள் என்ற தலைப்பில் வீடியோ ஒன்று வெளியாகி இருந்தது.
அதில் நடிகை சௌந்தர்யா உள்பட பலரது விவரங்கள் குறிப்பிடப்பட்டு இருக்கும் நிலையில் அதில் நடிகர் சித்தார்த்தும் இளம் வயதில் காலமானதாக குறிப்பிட்டிருந்தது.
இந்த வீடியோ தனது கவனத்திற்கு வந்ததும் உடனடியாக நடிகர் சித்தார்த் புகார் ஒன்றை யூடியூப் நிர்வாகத்துக்கு அனுப்பினார். அந்த புகாருக்கு பதில் அளித்துள்ள யூடியூப் நிர்வாகம் இந்த வீடியோவில் எந்த பிரச்சினையும் இல்லை என்று பதில் அளித்துள்ளது.
இந்த பதிலுக்கு ’அடப்பாவிகளா’என்று சித்தார்த் தனது டுவிட்டரில் பதிவு செய்து தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.
21 minute ago
35 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
35 minute ago
2 hours ago
2 hours ago