2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

நடிகையிடம் மர்மநபர்கள் கைவரிசை

Editorial   / 2020 ஓகஸ்ட் 18 , பி.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னிந்திய நடிகைகளில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகைளில் ஒருவர் ஈஷா ரெப்பா. 2012ஆம் ஆண்டு ‘லைஃப் இஸ் பியூட்டிஃபுல்’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

தொடர்ந்து தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வந்தவர், 2016ஆம் ஆண்டு வெளியான ‘ஓய்’ என்ற தமிழ் படத்தில் அறிமுகமானார். தெலுங்கில் பிஸியாக இருக்கும் ஈஷா ரெப்பா, கடந்த ஆண்டு தமிழில் ஜி.வி.பிரகாஷுக்கு நாயகியாக ‘ஆயிரம் ஜென்மங்கள்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமா சினிமா தொழில் முற்றிலும் முடங்கி போய் கிடக்கிறது.  இதனால் நடிகர், நடிகைகளின் ஒரே பொழுதுபோக்காக சமூக வலைதளங்கள். மாறியுள்ளன.

இந்த நிலையில், நடிகை இஷா ரெப்பாவின் ட்விட்டர் கணக்கு இப்போது ஹேக் செய்யப்பட்டுள்ளது. ட்விட்டரில் எக்டிவாக இருக்கும் இஷாவின் கணக்கை யாரோ சிலர் முடக்கி வைத்துள்ளனர்.

இதற்கு முன், நடிகைகள் அனுபமா பரமேஸ்வரன், ஷோபனா, ஊர்வசி ரவ்தெலா உள்பட பல நடிகைகளின் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டன. இதுபற்றி அப்போது அவர்கள் தெரிவித்து இருந்தனர். பின்னர்  அந்த கணக்குகள் மீட்கப்பட்டதாக அவர்கள் அறிவித்திருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X