2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

நயனின் பாஸ்போட் படங்கள் வட்ஸ் அப்பில் பரவியது எவ்வாறு?

George   / 2016 பெப்ரவரி 06 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகை நயன்தாராவின் பாஸ்போட் புகைப்படங்கள் எவ்வாறு வாட்ஸ்அப்பில் பரவியது என்பது தொடர்பில் கோலாலம்பூர் விமான நிலைய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

விக்ரம் நடிக்கும் இருமுகன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார், புலி திரைப்படத்தை தயாரித்த சிபு தமீன்ஸ் தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்புகள் மலேசியாவில் நடந்து வந்தன.

நேற்று இந்தியா திரும்புவதற்காக மலேசியா வந்த நயன்தாராவின் உதவியாளர்களிடம் சரியான பத்திரங்கள் இல்லாததால் மலேசிய குடியுரிமை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருவதாக செய்தி வெளிவந்தது. 

எனினும் இதனை திரைப்படக்குழு மறுத்துள்ளதுடன் அறிகையையும் வெளியிட்டது. 'மலேஷியாவின் இரண்டு பன்னாட்டு விமான முனையங்களில் பணி அனுமதி விதிமுறைகள் வேறுபட்டவை. வழக்கமாக இந்தியாவுக்கு செல்லும் பயணிகள் கே.எல்.1 முனையம் மூலம் பயணிப்பர். 

ஆனால், புதிய விமான சேவை நிறுவனமான மலிண்டோ கே.எல்.2 முனையம் மூலம் இயங்குகிறது. அம்முனையத்தில் குடியேற்ற அதிகாரிகள், நயன்தாராவின் உதவியாளர்களிடம் அவர்களுக்கான பணி அனுமதி மற்றும் அதன் விசா முத்திரைப்பதிவுக்கான சில விளக்கங்களை கேட்டுள்ளனர். 

பின்னர் நயன்தாராவே அதிகாரிகளிடம் பேசி பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டதோடு, அவரும், அவரது உதவியாளர்களும் இந்தியாவுக்கு எவ்வித இடையூறுமில்லாமல் திரும்ப ஏற்பாடு செய்தார். இதுதான் நடந்தது' என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், நயன்தாராவின் பாஸ்போர்ட் புகைப்படங்கள் நேற்று வாட்ஸ்அப்பில் வெளிவந்தன. இதுகுறித்து திரைப்படக்குழுவினர் கோலாலம்பூர் விமான நிலைய பொலிஸாரிடம் புகார் அளித்துள்ளனர். 

அதனையடுத்து, விமான நிலைய ஊழியர் ஒருவல் பணிஇடைநீக்கம்  செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X