George / 2016 பெப்ரவரி 09 , மு.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

மிலன் லுத்ரியாவின் பாட்ஷாஹோ திரைப்படத்தில் நடிகர் வித்யுத் ஜம்வால் நடிக்கவுள்ளதாக திரைப்பட நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்தத் திரைப்படத்தில் நடிகை கரீனா கபூர் நடிக்கிறார் என கடந்த சில நாட்களுக்கு முன் கூறப்பட்டது. தற்போது, அஜய்தேவ்கன் முக்கிய வேடத்தில் நடிக்கும் இத்திரைப்படத்தில் வித்யுத் ஜம்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம்.
பல உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டது தான் பாட்ஷாஹோ திரைப்படமாம். ராஜஸ்தானில் படமாக்கப்பட உள்ள இந்தத் திரைப்படத்தின் காட்சி அமைப்புக்களும், இசையும் நாட்டுப்புற பாரம்பரியத்தை சார்ந்து அமைக்கப்பட உள்ளதாம்.
நெருக்கடி நிலையின் போது நடந்த உண்மை சம்பவங்களை மையமாகக் கொண்டு கதை அமைக்கப்பட்டுள்ளதுடன் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26ஆம் திகதி வெளியிட நாட்குறித்துள்ளனர்.
7 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago