2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

பாடலாசிரியர் கவி.காளிதாஸ் காலமானார்

George   / 2016 மே 30 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாடலாசிரியர் கவி.காளிதாஸ், திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு நேற்ற இரவு காலமானார்.

பாடலாசிரியர் கவி.காளிதாஸ், கடந்த சில வருடங்களாகவே உடல்நலம் பாதிகப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தஞ்சையில் உள்ள தனியார் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உடல்நிலை தேறி கடந்த சில தினங்களுக்கு முன்பு வீடு திரும்பினார்.

இந்த நிலையில் நேற்று இரவு அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 66. 
அவரது உடல் தஞ்சையிலிருந்து சென்னை கொண்டு வரப்பட்டு பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள அவரது மகன் பாலசுப்பிரமணியத்தின் வீட்டில் வைகப்பட்டுள்ளது. இன்று இறுதி சடங்குகள் நடக்கிறது. மாலை 6 மணிக்கு மூலக்கொத்தலம் இடுகாட்டில் தகனம் செய்யப்படுகிறது.

காரைக்குடி அருகில் உள்ள திருப்பத்தூரைச் சேர்ந்த கவிஞர் காளிதாஸ், திருப்பத்தூரான் என்ற பெயரில் பக்தி பாடல்கள் எழுதி வந்தார். வைகாசி பொறந்தாச்சி திரைப்படத்தில் இசை அமைப்பாளர் தேவா, சினிமா பாடலாசிரியராக அறிமுகப்படுத்தியதுடன் பெயரையும் காளிதாஸ் என்று மாற்றினார். 

சுமார் 150 படங்களுக்கும், ஏராளமான பக்தி அல்பங்களுக்கும் பாடலாசிரியர் கவி.காளிதாஸ், பாடல்கள் எழுதி உள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X