2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

புதுப் பேய்

George   / 2016 ஜனவரி 21 , மு.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிடிச்சிருக்கு திரைப்படத்தில்  அறிமுகமாகி கண்ணா லட்டு தின்ன ஆசையா, வாலிபராஜா, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா ஆகியத் திபை;படங்களில் நடித்ததுடன் அதன் பிறகு வாய்ப்புகள் இல்லாமல் இருந்த நடிகை விசாகா சிங். பயம் ஒரு பயணம் என்றத் திரைப்படத்தில் பேயாக நடிக்கிறார். 

பேய் திரைப்படங்கள் அதிகமாக வெளிவந்துள்ளதையும், வெளிவரவுள்ளதையும் நான் அறிவேன். பயம் ஒரு பயணம் மற்ற பேய் திரைப்படங்களில் இருந்து நிச்சயம் மாறுப்பட்டதாக இருக்கும். பேய்த் திரைப்படங்கள் நகைச்சுவை, அல்லது செண்டிமெண்டாகவோதான் உள்ளன. முழுக்க முழுக்க பயமுறுத்தும் திரைப்படமாக இது இருக்கும் என்கிறார் விசாகா சிங்.

'பேயாக நடிக்கும் கதாநாயகியாக பலரை சிந்தித்தோம், சிலரை சந்தித்தோம். கதை கேட்ட மாத்திரத்திலே நடிக்க ஒப்புக் கொண்டார் விசாகா சிங். பாத்திரத்துக்கு ஏற்ப தன்னை அவர் அகோரப்படுத்த ஒப்புக் கொண்டதே தொழில் மீது அவருக்கு உள்ள மரியாதையை புரிய வைத்தது' என்கின்றார் திரைப்படத்தின் இயக்குநர் மணிசர்மா.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X