Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
George / 2016 ஏப்ரல் 20 , பி.ப. 07:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகைகள் அனைவருமே சூட்டோடு சூடாக அஜீத் திரைப்படத்தில் நடித்து விட வேண்டும் என்பதில் ஆர்வமாக உள்ளனர்.
சில ஹிட் திரைப்படங்களில் நடித்த லட்சுமிமேனன், வேதாளம் திரைப்படத்தில் அஜீத்தின் தங்கையாக நடித்து தனது ஆசையை நிறைவேற்றிக்கொண்டார்.
அதையடுத்து பல நடிகைகள், அஜீத் திரைப்படத்தில் கதாநாயகியாகவோ அல்லது முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரிலோ நடித்து விட வேண்டும் என்று கடுமையாக முயற்சி எடுத்து வருகின்றனர்.
இயக்குநர் சிவா இயக்கும் அஜீத்தின் 57ஆவது திரைப்படத்தில் இரண்டு நாயகிகள் இருப்பதாக ஏற்கெனவே செய்தி வெளியானதை அடுத்து தென்னிந்திய சினிமாவில் உள்ள பல முன்னணி நடிகைகளும் போட்டா போட்டியில் இறங்கினர். அவர்களில் கீர்த்தி சுரேசும் ஒருவர்.
ரஜினி முருகன் ஹிட்டுக்குப்பிறகு தற்போது விஜய்யின் 60ஆவது திரைப்படத்தில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், இந்த நேரத்தில் அஜீத் திரைப்படத்தில் நடிக்க முயற்சி எடுத்தால் நிறைவேற வாய்ப்பு இருக்கிறது என்பதால் தீவிரமான முயற்சி எடுத்து வந்தார்.
ஆனால், அது தொடர்பில் இயக்குநர் சிவாவை சந்திக்க கேட்டபோது அவர் பிசியாக இருப்பதாக சொல்லி சொல்லி இழுத்தடித்து விட்டார்களாம். அதனால், அந்த முயற்சியில் இருந்து பின்வாங்கி விட்டாராம் கீர்த்தி சுரேஷ்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago