2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

ப்ரீத்தியின் புது முயற்சி

George   / 2016 ஜனவரி 05 , பி.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகை ராகுல் ப்ரீத்தி சிங், 'நன்னுக்கு பிரேமதோ' என்றத் திரைப்படத்தில் ஜுனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் உருவாகும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவு பெற்று தற்போது  இறுதிக்கட்ட பணிகள் இடம்பெற்று வருகின்றன.

இத்திரைப்படத்துக்காக நடிகை ராகுல் ப்ரீத்தி சிங், முதன் முறையாக தெலுங்கில் டப்பிங் பேசுகின்றார். 

டப்பிங் பேசும் போது ராகுல் ப்ரீத்தி சிங் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்துள்ள அவர், டப்பிங் பேசுவது சுலபம் என்று யார் சொன்னது? ஆனால், எனக்கு பிடித்திருக்கின்றது என குறிப்பிட்டுள்ளார். 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13ஆம் திகதி திரைக்கு வரவிருக்கும் இத்திரைப்படத்தின்; ப்ரமோஷன் பணிகள் இன்று ஆரமப்பிக்கப்படவுள்ளதாக படக்குழுவினர் கூறியுள்ளனர். இத்திரைப்படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X